Screen Reader Access     A-AA+
அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர் - 639005, கரூர் .
Arulmigu Kalyana Venkatramanaswamy Temple, Karur - 639005, Karur District [TM025303]
×
Temple History

புராண பின்புலம்

ஒரு காலத்தில் சோமசர்மா எனும் பக்தர் ஒருவர் தனது மனைவியோடு இல்லறம் எனும் நல்லறத்தை நடத்தி வந்தார். அவர்களுக்கு மகப்பேறு இல்லாதது பெருங்குறையாக இருந்தது. அவர்கள் நியமத்துடன் பல விரதங்களை மேற்கொண்டனர். ஒரு நாள் நள்ளிரவில் அவர் தியானம் செய்து கொண்டு இருந்த போது, நாரதர் அவர் முன் தோன்றி, முற்பிறவிப் பாவம் தொலைய திருப்பதி யாத்திரையை நீ மேற்கொள்வாயாக என ஆணையிட்டு மறைந்தார். சோமசர்மாவும் அவரது மனைவியும் திருப்பதிக்கு நடந்து செல்லும் வழியில் காவிரியில் புனிதநீராடி பூசைகள் செய்து பிறகு, தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். அப்பொழுது நாரதர் அவ்விருவர் முன்பு மீண்டும் தோன்றி காவிரிக்கரையோரம் நடந்து அமராவதி ஆறு காவிரியுடன் கலக்குமிடம் செல்லுங்கள். அங்கே சிலர் உங்களை வரவேற்று அவர்களது இருப்பிடம் அழைத்துச் செல்வர்....