மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அன்னதானத் திட்டம் இவ்வாலயத்தில் 23.03.2002 முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் 100 நபர்களுக்கு மதியம் அன்னதானம் உணவு அளிக்கப்படுகிறது. அன்னதான திட்டத்தில் ( ) போக் சான்றிதழ் பெறப்பட்டு சுத்தமான உணவு தயாரிக்கப்படுகிறது, சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் உள்ளது. இத்திருக்கோயிலில் பிரதி சனிக்கிழமை சுமார் 300 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்கள் நினைவு நாள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் விஷேச நாளன்று ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூ.3500 /- செலுத்தி பங்கு பெறலாம் அன்னதான திட்டத்தில் அன்னதான திட்ட நன்கொடை வைப்பு நிதியாக ரூ.35,000 /- செலுத்தினால் உபயதாரர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்